×

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் காவலர் முதலமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவில்லை: சென்னை போலீஸ்

சென்னை: சென்னை பாதுகாப்பு காவல்பிரிவை சேர்ந்த பெண் தலைமை காவலர் முதல்வர் பழனிசாமி வீட்டில் பணியாற்றவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் வீட்டில் பணியில் இருந்த பெண் காவலருக்கு கொரோனா என்ற தகவலுக்கு சென்னை காவல்துறையினர் மறுப்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.குறிப்பாக சென்னை கோயம்பேடு சந்தையை மையமாக வைத்து கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது.கொரோனா பரவி வரும் சமயத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதுஇதனால் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

ஒரு சில இடங்களில் காவலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.இது சற்று காவலர்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே சென்னையில் முதலமைச்சர் பழனிசாமி இல்லத்தில் பணிபுரிந்த பெண் தலைமை காவலருக்கு கொரோனா பரவியது என்று வதந்தி வெளியாகியது. இந்நிலையில் முதலமைச்சரின் இல்லத்தில் பணிபுரிந்த காவலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மை அல்ல என காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட சென்னை காவல்துறை வெளியிட்ட அறிக்கையில்; சென்னை பாதுகாப்பு காவல் பிரிவைச் சேர்ந்த பெண் தலைமை காவலர் ஜெயந்தி என்பவர், முதலமைச்சரின் இல்லப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் கிரீன்வேஸ் சாலையில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை பணியில் இருந்ததாகவும், அதன் பிறகு அவர் அங்கு பணியில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் மே 3ஆம் தேதி, கொரோனா பரிசோதனை செய்யபட்டதில், கொரோனா தொற்று உள்ளதாக 6ஆம் தேதி தெரிவித்ததன்பேரில், பெண் தலைமைக் காவலர் ஜெயந்தி, ஒமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளபட்டதில் கொரோனா தொற்று இல்லை என்று தெரிய வந்துள்ளது. எனவே, மேற்படி பெண் காவலருக்கு கொரோனா தொற்று இருப்பதாக வந்த செய்திகள் உண்மையில்லை என தெளிவு படுத்தப்படுவதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

Tags : Coroner ,Chennai ,chief minister ,woman guard , Corona, Girl Guard, Security Service, Madras Police
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...