ஊரப்பாக்கத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீ விபத்து

சென்னை: சென்னை அடுத்த ஊரப்பாக்கத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தீ விபத்தை அடுத்து காரில் இருந்த ஓட்டுனர் உள்பட 3 பேர் உடனே கீழே இறங்கியதால் உயிர் தப்பினர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் கார் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ஓடும் காரில் தீப்பிடித்ததால் ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.

Related Stories:

>