×

கொரோனா ஊரடங்கு காரணமாக உள்நாட்டு விமான துறைக்கு ரூ.25,000 கோடி இழப்பு ஏற்படும்: CRISIL கணிப்பு

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அறிவிப்பால், விமான போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ளது. விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், அதன் ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர். தற்போது சரக்கு விமானங்களும், சிறப்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக உள்நாட்டு விமான போக்குவரத்து துறைக்கு நடப்பு நிதியாண்டில் 25 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என கிரடிட் ரேட்டிங் மற்றும் ஆய்வு நிறுவனமான CRISIL தெரிவித்துள்ளது.

இதில் 70 சதவிகிதமான 17 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு விமான நிறுவனங்களுக்கு ஏற்படும் என அது கணித்துள்ளது. விமான நிலையங்களை மேலாண்மை செய்பவர்களுக்கு சுமார் 5500 கோடி ரூபாயும், விமான நிலையங்களில் சில்லறை வணிகம் நடத்துபவர்களுக்கு 1800 கோடி ரூபாயும் இழப்பு ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த வருவாய் இழப்பால் கடந்த 10 ஆண்டுகளாக உள்நாட்டு விமானப் போக்குவரத்து துறை அடைந்த வளர்ச்சி 11 சதவிகிதம் பின்னோக்கி சென்று விடும் எனவும் CRISIL தெரிவித்துள்ளது. ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டால் இந்த இழப்பு மேலும் அதிகரிக்கும் என அது கூறியுள்ளது.

Tags : airlines ,CRISIL , Corona, Curfew, Domestic Aviation Department, CRISIL
× RELATED மீனம்பாக்கம் விமான நிலையத்தில்...