×

கோயம்பேடு சந்தை மூடப்பட்டதால் மலைவாழைக்காய்கள் தேக்கம்: கொடைக்கானல் வியாபாரிகள் கவலை

கொடைக்கானல்: கோயம்பேடு சந்தை மூடப்பட்டதால் கொடைக்கானலில் மலைவாழைக்காய்கள் தேக்கமடைந்துள்ளன. சந்தைப்படுத்த முடியாததால் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர்.கொரோனா பரவலால் விவசாயமும் கடுமையாக முடங்கி உள்ளது. தற்போது சென்னை கோயம்பேடு மார்க்கெட் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால், பல இடங்களிலும் காய்கறிகள் தேக்கமடைந்துள்ளன. மலைக்காய்கறிகளுக்கு பிரதானமாக உள்ள திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலை பொருத்தவரையில், இங்கு விளையக்கூடிய மலை வாழைக்காய்களை நேரடியாக கோயம்பேட்டிற்கு தான் அனுப்புவார்கள். கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான வடகவுஞ்சி, பாச்சலூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழை விவசாயிகள் உள்ளனர்.

வழக்கமாக வாரத்திற்கு இரண்டு முறை இங்குள்ள மலைக்கிராமங்களில் வாழைச்சந்தை நடைபெறும். தற்போது வாழைச்சந்தை நடைபெறாததாலும், பறித்த மலைவாழைக்காய்களையும் கோயம்பேட்டிற்க்கு அனுப்ப முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் பல லட்சம் மதிப்புள்ள வாழைக்காய்கள் தேக்கமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். மேலும், அரசு இதற்கு தக்க தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : closure ,Coimbatore ,traders ,Kodaikanal , Dry , closure ,Coimbatore, market,Kodaikanal ,traders
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாவட்ட கலெக்டர் ஆய்வு