×

கொரோனா தொற்றை தடுக்க ஐ.சி.எம்.ஆரின் உதவியுடன் ஆயுர்வேத மருந்து கொடுக்கும் பரிசோதனை தொடக்கம்; மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

டெல்லி: கொரோனா தொற்றை தடுக்க ஆயுர்வேத மருந்து கொடுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பேட்டியளித்துள்ளார். அஸ்வகந்தா, யஷ்டிமது, குடுச்சி பப்பாளி, ஆயுஷ் 64 மருந்துகள் தரப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49,351-லிருந்து 52,952-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,694-லிருந்து 1,783-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது; இந்தியாவில் இன்று ஒரு முக்கியமான நாள் ஆகும். ஏனென்றால் மத்திய அரசு ஒரு வரலாற்று படைப்பு ஒன்றை தொடங்கியுள்ளது. அதாவது கொரோனா தொற்றை தடுக்க பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் பணிபுரிபவர்களுக்கு ஆயுர்வேத மருந்து கொடுக்கும் பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது. ஆயுஷ் மருந்துகளான அஸ்வகந்தா, யஷ்டிமது, குடுச்சி பிப்பாலி, ஆயுஷ் -64 மருந்துகள் ஆகியவை சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் பணிபுரிபவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் இன்று தொடங்கப்பட்டுள்ளன. ஐ.சி.எம்.ஆரின் தொழில்நுட்ப உதவியுடன் ஆயுஷ் மற்றும் சுகாதார அமைச்சகம் மற்றும் சி.எஸ்.ஐ.ஆர் இவை மூன்றும் சேர்ந்து இந்த முயற்சியை எடுத்துள்ளன.

மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுஷ் அறிவுறுத்திய மருந்துகளின் பயன்பாடு குறித்து 50 லட்சம் பேரிடமிருந்து தகவல்களை சேகரிக்க சஞ்சீவானி என்று செயலி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா பரிசோதனைகள் கணிசமாக அதிகரித்துள்ளன. அதனால் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனை கண்டு மக்கள் யாரும் அச்சம் கொள்ளவேண்டாம். இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டால் உயர்ந்த நாடுகளை விட குறைவு தான். இதனால் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாம் வெற்றியை நோக்கி நகர்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.மேலும் இந்த முழு ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு தந்த அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். தளர்வுகள் அனைத்தும் ஒவ்வொரு கட்டமாக வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Harshvardhan ,Ayurvedic Drug Testing ,ICMR , Corona, ICMR, Ayurvedic Medicine and Union Minister Harshvardhan
× RELATED அரசியலில் இருந்து விலகிய ஒன்றிய முன்னாள் அமைச்சர் ஹர்ஷ்வர்தன்!