×

தூத்துக்குடியில் காலையில் திறக்கும் போதே டாஸ்மாக் மதுக்கடை காலி: மதுப்பிரியர்கள் அதிர்ச்சி

தூத்துக்குடி: தூத்துக்குடியில் காலையில் திறக்கும் போதே டாஸ்மாக் மதுக்கடை காலியாக இருந்ததால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பை  தடுப்பதற்காக நாடு முழுவதும் மே 3ம் தேதியுடன் முடிவடைய இருந்த ஊரடங்கு உத்தரவை, மே 17ம் தேதி வரை மீண்டும் மத்திய அரசு நீட்டித்துள்ளது. இருப்பினும் முடி வெட்டும் கடை, அழகு நிலையங்கள் உள்ளிட்டவற்றைத் தவிர பிற தனிக் கடைகள் திறக்கலாம் என அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, மற்ற மாநிலங்களில் டாஸ்மாக் கடைகள் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டன. தொடர்ந்து, தமிழகத்திலும், இன்று முதல் டாஸ்மாக் கடைகளை கட்டுப்பாட்டுடன் திறக்கப்பட்டுள்ளன.

வெகு நாட்களுக்கு பிறகு கடைகள் திறக்கப்படுவதால் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு கடைகள் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ஒருவருக்கொருவர் 6 மீட்டர் இடைவெளி விட்டு நிற்கும் வண்ணம் கட்டங்கள் வரையப்பட்டுள்ளன. ஒருவர் வாங்கி விட்டு வந்த பின்னரே மற்றவர்கள் செல்ல வேண்டும். மேலும் 5 பேருக்கு மேல் அங்கு கூடக்கூடாது என்பதால் அதனை கண்காணிக்க கூடுதல் பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர ஒவ்வொரு டாஸ்மாக் கடைக்கும் 2 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். கடைகள் திறந்தபின், நீண்ட வரிசையில் சமூக இடைவெளியைப் பின்பற்றி மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடியில் காலையில் திறக்கும் போதே டாஸ்மாக் மதுக்கடை காலியாக இருந்ததால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஊரடங்குக்கு முன்பிருந்த மதுபானங்களை விடுமுறையின் போதே விற்றுவிட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10,145 எண் உடைய கடையில் மதுபானம் ஏதும் இல்லாததால் பகல் 12 மணி வரை விற்பனை நடக்கவில்லை. கடை ஊழியர்களுடன் மதுப்பிரியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அடுத்து மதுபானம் கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Tags : bartender ,Tusk ,Thoothukudi Thothukudi ,Tusk Bartender Evacuates , Thoothukudi, Task Bar, Galle
× RELATED போலந்து புதிய பிரதமர் டொனால்ட் டஸ்க் பதவியேற்பு