×

ஊரடங்கிற்கு பிறகு 50% பயணிகளுடன் பேருந்துகள் இயக்கம் : ஒட்டுனர், நடத்துநர், பயணிகளுக்கான விதிகளை வெளியிட்டது தமிழக போக்குவரத்து துறை

சென்னை: பொது முடக்கம் முடிந்த பிறகு 50% பயணிகளுடன் அரசு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பணிமனைகளுக்கு தமிழக போக்குவரத்துத் துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. வருகிற மே 17ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊரடங்கு காரணமாக மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் பேருந்து போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் ஊரடங்கு முடிந்த பிறகு 50% பயணிகளுடன் அரசு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பணிமனைகளுக்கு தமிழக போக்குவரத்துத் துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக 8 போக்குவரத்து கழகத்திற்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,

*ஊரடங்கு முடிந்த பிறகு 50 சதவீதம் பயணிகள் உடன் அரசுப் பேருந்துகள் இயங்க வேண்டும்.

*ஒட்டுனர், நடத்துநர்களுக்கு முகக்கவசம், கையுறை மற்றும் கிருமி நாசினி வழங்கப்படும். பேருந்து இயக்குவதற்கு முன் காய்ச்சல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

*பயணிகள் இருக்கையில் அமர மார்க் செய்ய வேண்டும். பேருந்தில் நின்று பயணம் செய்தால் 6 அடி இடைவெளி அவசியம்.

*பேருந்தின் ஜன்னல்கள் கட்டாயமாக திறந்திருக்க வேண்டும். பேருந்து நிலைய நிறுத்தத்தில் 5 மீட்டர் இடைவெளி விட்டு நிறுத்த வேண்டும்.

*பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். தவறினால் பயணம் செய்ய அனுமதிக்கப்படக் கூடாது.

*வரிசையில் நின்று பேருந்துகளில் ஏற வேண்டும். அதேபோல் E- pay, Google pay போன்றவை மூலம் டிக்கெட் கட்டணம் செலுத்த ஏற்பாடு செய்யப்படும். முடிந்தளவு மாதாந்திர பாஸ் அட்டை பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Transport Department , Curfew, 50%, passenger, buses, movement, driver, conductor, passenger, rules, transport department
× RELATED தேர்தலில் வாக்களிப்பதற்காக 2...