×

டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு : ட்விட்டரில் ட்ரெண்டானது #குடிகெடுக்கும்_எடப்பாடி ஹாஷ்டாக்!!

சென்னை : தமிழகத்தில் இன்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், #குடிகெடுக்கும்_எடப்பாடி என சமூக வலைத்தளங்களில் ஹாஷ்டாக் ஒன்று வைரலாகி வருகிறது. இதேபோல் 2 நாட்கள் முன்னதாக மே 7ம்
தேதி அழிவின் ஆரம்பம் என்ற ஹாஷ்டாக் ஒன்றும் மதுக்கடைகள் திறப்பதற்கு எதிராக வைரலானது.  

*கொரோனா பாதிப்பை  தடுப்பதற்காக நாடு முழுவதும் மே 3ம் தேதியுடன் முடிவடைய இருந்த ஊரடங்கு உத்தரவை,  மே 17ம் தேதி வரை மீண்டும் மத்திய அரசு நீட்டித்துள்ளது.  இருப்பினும் முடி வெட்டும் கடை, அழகு நிலையங்கள் உள்ளிட்டவற்றைத் தவிர பிற தனிக் கடைகள் திறக்கலாம்  என அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.

*இதைத் தொடர்ந்து, டாஸ்மாக் கடைகள் திறக்கப் படுமா? என்ற அச்சம் தமிழக குடும்ப பெண்களிடமும் சமூக ஆர்வலர்களிடம் தொடர்ந்து நிலவி வந்தது. இவ்வாறான சூழலில் தமிழகத்தில் சென்னையை தவிர பிற மாவட்டங்களில் மே 7ம் தேதி முதல் டாஸ்மாக் கடை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். அந்த வகையில், சமூக வலைதளங்களிலும் இதற்கு எதிரான கண்டனங்கள் வலுத்தன.

*அதன்படி,ட்விட்டரில் டாஸ்மாக் என்ற ஹாஷ்டேக்-ம்  மே 7ம் தேதி முதல் அழிவு ஆரம்பம் என்ற ஹேஸ்டேக்-ம்  வைரலானது. அதே சமயம் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு தடையில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

*இதைத் தொடர்ந்து சென்னையை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் வயது வாரியான நேரக்கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளது.

*ஏற்கனவே கோயம்பேட்டில் பரவி வரும் வைரஸை  கட்டுப்படுத்த முடியாமல் தமிழக அரசு திணறி வருகிறது. இந்த காலக்கட்டத்தில்  டாஸ்மாக் கடைகளை திறப்பது விபரீத விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்பது அனைவரும் தெரிந்த ஒன்றே.  

*மீண்டும் டாஸ்மாக் கடை திறக்க அங்கு கூட்டம் கூடி கொரோனா  பாதிப்பு ஏற்படுத்துவதுடன் பல குடும்பங்களை இந்த ஊரடங்கு காலத்தில் மேலும் வறுமைக்கு தள்ளி இக்கட்டான சூழல்  ஏற்பட காரணமாகிவிடும்  என்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

*இதன் காரணமாகவே டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு எதிராக #குடிகெடுக்கும்_எடப்பாடி என்ற ஹாஷ்டாக் வைரலாகி முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 


Tags : TASMAC, Shops, Opening, Resistance, Twitter, Decorating_Edapady Hashtag
× RELATED டிவிட்டரில் மகேஷ்பாபு டாப்