×

சென்னையில் தீயணைப்பு வீரர்கள் 14 பேருக்கு கொரோனா..:போலீசார் 54 பேருக்கு கொரோனா தொற்றினால் பாதிப்பு

சென்னை: சென்னையில் காவல்துறையினருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில் தீயணைப்பு வீரர்களும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் அரசு மருத்துவமனை வளாகங்கள், அரசு அலுவலங்களில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கிருமி நாசினி தெளிக்கும் பணியில் தீயணைப்பு துறை முக்கிய பங்காற்றி வருகிறது. அடுக்குமாடி குடியிருப்பில் ஸ்கை சிப்ட் இயந்திரங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுப்பட்ட எஸ்பிளனேடு, வில்லிவாக்கம், விருகம்பாக்கம், திருவல்லிக்கேணி, எண்ணூர் உள்ளிட்ட 6 தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த வீரர்கள் 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் வேப்பேரி, எஸ்பிளனேடு தீயணைப்பு நிலைய வீரர்கள் உட்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால் கொரோனா பாதித்த தீயணைப்பு வீரர்களின் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் போலீசார் 54 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் தீயணைப்பு வீரர்களும் பாதிப்புக்கு உள்ளாகிவருவதால் அச்சமைந்துள்ளனர்.

இதனிடையே கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பூவிருந்தவல்லியை சேர்ந்த 56 பெண் நேற்று இரவு உயிரிழந்துவிட்டார். பசுமைவழிச்சாலையில் முதல்வர் பாதுகாப்பு பிரிவில் பணியில் இருந்த பெண் காவலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அதிமுக முன்னாள் எம்.பி. விஜயகுமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : firefighters ,Coroner ,Chennai , Coroner ,14 ,firefighters ,Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...