தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் இப்ராகிம் (38). இவர் நேற்று முன்தினம் மாலை தனது நண்பருடன் பைக்கில் திருவொற்றியூர் சென்று இரவு பைக்கில் வீடு திரும்பினார். திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் வந்தபோது, காற்றில் பறந்து வந்த மாஞ்சா நூல் அவரது கழுத்தை அறுத்தது. பைக்கை நிறுத்தியபோது அவரது கழுத்தில் ரத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தண்டையார்பேட்டை போலீசார், இப்ராகிமை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து, சந்தேகத்தின்பேரில் மாஞ்சா நூல் மூலம் காற்றாடி விட்ட 2 பேரை பிடித்து விசாரிக்கின்றனர்.
