×

பல லட்சம் முதலீட்டில் செயல்பட்ட உடற்பயிற்சி மையங்கள் மூடல்: கடன் சுமையில் தவிக்கும் உரிமையாளர்கள்

திருவொற்றியூர்: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் திரையரங்குகள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், உடற்பயிற்சி மையங்கள் போன்ற பல்வேறு வியாபார மையங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் இதன் உரிமையாளர்கள் மட்டுமன்றி, இங்கு பணிபுரியும் லட்சக்கணக்கான தொழிலாளர்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில், தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான உடற்பயிற்சி மையங்கள் உள்ளன. இங்கு இளம் பெண்கள், வாலிபர்கள் மற்றும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மட்டுமின்றி வயதானவர்களும் தங்களுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சிகளை செய்து வருகின்றனர்.

இந்த பிட்னஸ் சென்டர்களை பெரும்பாலும் படித்த இளைஞர்களே வைத்து நடத்தி வருகின்றனர். இவர்கள் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்து உடற்பயிற்சி பெறுபவர்களை கவரும் வகையில் பல நவீன இயந்திரங்களை வைத்து செயல்படுத்தி வந்தனர். தற்போது ஊரடங்கு உத்தரவால் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் தொடர்ந்து உடற்பயிற்சி மையங்கள் செயல்படாமல் மூடப்பட்டுள்ளது. இதனால் உடற்பயிற்சி உபகரணங்கள் பயன்படுத்தப்படாமல் பாழாகும் நிலை ஏற்பட்டுள்ளது. கடன் வாங்கி பல லட்ச ரூபாய் முதலீடு செய்து பிட்னஸ் சென்டரை துவக்கிய பல இளைஞர்கள் நஷ்டம் ஏற்பட்டு கடன்சுமைக்கு ஆளாகியுள்ளனர். மேலும், பல விளையாட்டு வீரர்கள், இளம்பெண், வாலிபர்கள் உடற்பயிற்சி செய்ய முடியாமல் வீட்டிலேயே முடங்கி உடல் பருமனாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tags : owners ,Closing ,fitness centers , Fitness centers, closures, credit, owners
× RELATED சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தில் ஆய்வகம், பயிற்சி மையம் திறப்பு