×

எஸ்பிஐ அறக்கட்டளை 30 கோடி நிதி உதவி

சென்னை: இந்தியா முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சவால்களை சந்தித்து வருகிறது. இந்த சூழலில் நாடு முழுவதும் பல்ேவறுபட்ட கொரோனா நிவாரண நிகழ்வுகளை செயல்படுத்துவதற்காக எஸ்பிஐ அறக்கட்டளை 30 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. கொரோனாவிற்கு எதிரான போரில் உதவத் தயாராகியுள்ள எஸ்பிஐ அறக்கட்டளை மருத்துவ முன்னேற்றத்தை உருவாக்க கீழ்க்கண்ட நடவடிக்கைகளை திட்டமிட்டுள்ளது. உணவு நிவாரண ஆதரவு, சுகாதார பராமரிப்பு கட்டமைப்பை பலப்படுத்துவது, சுகாதார பணியாளர்களுக்கான திறன்மேம்பாடு,

இந்திய அறிவியல் நிறுவனத்துடன் இணைந்து கொரோனா தொடர்பான திட்டங்களை ஆய்வு செய்வது உள்ளிட்ட முயற்சிகளை செயல்படுத்துவதற்காக சுகாதாரத்தை மையப்படுத்தி முதன்மையான நிகழ்வொன்றை எஸ்பிஐ அறக்கட்டளை தொடங்கியுள்ளது. இதுகுறித்து எஸ்பிஐ தலைவர் ரஜினிஷ்குமார் கூறுகையில், கொரோனாவுக்கு எதிரான நமது கூட்டு தாக்குதலில் நமது சிறிய முயற்சிகள் மாற்றத்தை உருவாக்குமென்று நம்புகிறோம் என்றார்.



Tags : SBI Foundation 30 , SBI Foundation ,financial assistance
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...