×

புறநகர் பகுதிகளில் ஆவின் பால் தட்டுப்பாடு

சென்னை: மாதவரம் ஆவின் பால் பண்ணையில் வேலை செய்யும் 2 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால் மற்ற தொழிலாளர்கள் பணிக்கு வர தயங்குவதாகவும், பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இதை ஆவின் நிர்வாகம் முற்றிலும் மறுத்துள்ளது.
இதுகுறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஆவின் நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதனால் மாதவரம் ஆவின் பால் பண்ணையில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

 இதனால் பால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது என்பது போன்ற செய்திகள் வெளியானது. அதில் உண்மையில்லை. பொதுமக்கள் அதை நம்ப வேண்டாம். ஆவின் பால் பண்ணைகள் மற்றும் அலுவலகங்களில் நூறு சதவிகிதம் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.பால் பண்ணையின் உள்பகுதி, வெளிப்பகுதி கிருமிநாசினி மூலம் தினமும் முழுமையாகச் சுத்தம் செய்யப்படுகிறது. இந்த பணியாளரின் பிரச்னைக்கு பிறகு, சுத்தப்படுத்தும் பணியில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.
பொய்யான செய்திகள் பரவி வருகின்றன. பொதுமக்கள் நம்ப வேண்டாம் என நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்நிலையில் நேற்று புறநகர் பகுதிகளான தாம்பரம் கூட்டுரோடு, மேடவாக்கம், கீழ்க்கட்டளை, தரமணி, பெருங்குடி, பள்ளிக்கரணை, வண்ணாரப்பேட்டை, துரைப்பாக்கம் போன்ற பகுதிகளில் ஆவின் பால் கேட்டு கடைக்கு சென்றால் கடந்த 2 நாட்களாக ஆவின்பால் சரியாக வரவில்லை என்று கடையின் உரிமையாளர்கள் கூறியதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


Tags : suburbs , Suburbs, aavin milk, scarcity
× RELATED சசிகலா ஒரு வெற்று பேப்பர்: ஜெயக்குமார் கிண்டல்