×

கொரோனா சிகிச்சைக்கு சென்றவர் கேன்சரில் சாவு: பரிசோதனை முடிவுகளால் குழப்பம்

பெரம்பூர்: கொளத்தூர் ஜி.கே.எம்.காலனி சிவானந்தம் தெரு பகுதியை சேர்ந்த 39 வயது நபருக்கு கடந்த ஒன்றரை வருடமாக பிரைன் டியூமர் மற்றும் கேன்சர் இருந்ததாகக் கூறப்படுகிறது.  கடந்த 21ம் தேதி காலை இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 23ம் தேதி அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.  இதனையடுத்து, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அவர் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.  இதற்கிடையில், 25ம் தேதி அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என முடிவு வந்தது.

இதனையடுத்து, அவர் அதே மருத்துவமனையில் நியூரோ பிரிவில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.  சிகிச்சை பலனின்றி நேற்று காலை 9 மணியளவில் அவர் மரணமடைந்தார். அவரது உடல் திருவிக நகர்  மயானத்தில் நேற்று மாலை 3 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. உடல்நிலை பாதிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்ற நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டும் கொரோனா இல்லை என்று பரிசோதனை முடிவில் தெரியவந்து  தற்போது அவர் உயிரிழந்துள்ளது பல சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

Tags : Death , Death in corona, cancer, test results
× RELATED மதுரை விபத்து: பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு