×

சிங்கப்பூர், கத்தாரில் பலி விகிதம் குறைவு: 20,000க்கு 18 பேர் மட்டுமே சாவு

சிங்கப்பூர்: சிங்கப்பூர், கத்தாரில் கொரோனாவால் பாதிப்போர் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், பலியாவோர் எண்ணிக்கை மிக குறைவாக இருந்து வருகிறது. சிங்கப்பூரில் 20,198 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 18 பேர் மட்டுமே பலியாகி உள்ளனர். பலி விகிதம் வெறும் 0.093 சதவீதம் மட்டுமே. கத்தாரில் 17,972 பேர் பாதிக்கப்பட்டு, 12 பேர் மட்டுமே இறந்துள்ளனர். அங்கு இறப்பு விகிதம் 0.07 சதவீதம் மட்டுமே. மற்ற நாடுகளில் கொத்துக் கொத்தாக மக்கள் மடிந்து வரும் நிலையில், பணக்கார நாடுகளான சிங்கப்பூரிலும், கத்தாரிலும் போதிய மருத்துவ வசதிகள் இருப்பதே பலி எண்ணிக்கை குறைவாக இருக்க காரணமாக கூறப்படுகிறது.

குறிப்பாக, சிங்கப்பூரில் வெளிநாட்டு தொழிலாளர்களே பெரும்பாலானோர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். தமிழகம் உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் தங்குமிடத்தில் ஏற்பட்ட வைரஸ் தொற்று தான் பெருமளவில் பரவி இருக்கிறது. நேற்றும் புதிதாக 788 பேருக்கு வைரஸ் உறுதிபடுத்தப்பட்டது. அதில், 11 பேர் மட்டுமே சிங்கப்பூரை பூர்வீகமாக கொண்டவர்கள். இதனால், வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கியுள்ள இடம் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை உயர்த்த சிங்கப்பூர் அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Tags : Qatar ,Singapore , Singapore, Qatar, Corona
× RELATED சிங்கப்பூர் துறைமுகத்தில் கப்பலில்...