×

இணையதளத்தில் அவதூறு விஜய் தேவரகொண்டாவுக்கு நடிகர்கள் ஆதரவு

சென்னை: இணையதளத்தில் அவதூறான கருத்து வெளியான விவகாரத்தில் நடிகர் விஜய தேவரகொண்டாவுக்கு சிரஞ்சீவி, மகேஷ்பாபு உள்பட தெலுங்கு திரையுலகினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் தனது அறக்கட்டளை மூலம் கொரோனா பாதிப்புகளுக்கு நிதியுதவி அளித்த நடிகர் விஜய் தேவரகோண்டா, நியாயமான உதவி தேவைப்படுபவர்கள் தனது இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று சொல்லியிருந்தார். இதற்காக விருப்பம் உள்ளவர்கள் நன்கொடை தரலாம் என்றும் அறிவித்தார். அதன்படி சில நாட்களில் சுமார் 70 லட்சம் ரூபாய் நன்கொடை சேர்ந்தது. இதையடுத்து விஜய் தேவரகொண்டா பற்றி தெலுங்கு இணையதளத்தில் தவறான கருத்து வெளியானது.

நன்கொடை எப்படி வந்தது என்று கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் அவரை தரக்குறைவாக விமர்சனம் செய்தும் செய்தி வெளியானது. இதனால் ஆவேசம் அடைந்த விஜயதேவரகொண்டா, ‘மக்கள் இதுபோன்ற போலிகளை நம்பாமல், ஊடக தர்மத்தின் அடிப்படையில் செயல்படும் நேர்மையான ஊடகங்களை நம்புங்கள்’ என்றார். இதையடுத்து விஜய் தேவரகொண்டாவுக்கு தெலுங்கு திரையுலகில் ஆதரவு பெருகிவருகிறது.
இதுபற்றி சிரஞ்சீவி கூறும்போது, ‘இதுபோன்ற இழிவான பொய் தகவல்களால் நானும் என் குடும்பமும் பாதிக்கப்பட்டு இருக்கிறோம்.

நீங்கள் கவலைப்படாதீர்கள். நன்மைகள் செய்யும்போது இதுபோல் குறுக்கீடு செய்யும் நபர்களை தூரம் தள்ளுங்கள்’ என்றார். ‘இந்த விவகாரத்தில் நான் உங்கள் பக்கம் நிற்கிறேன்’ என நடிகர் மகேஷ்பாபு கூறியுள்ளார். ராணா கூறும்போது, ‘சரியாக சொல்லி இருக்கிறீர்கள். உங்களுக்கு எனது ஆதரவு உண்டு’ என்றார். இதேபோல் நாகார்ஜுனா, ரவிதேஜா உள்பட தெலுங்கு ஹீரோக்கள் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Tags : Slander Vijay Deverakonda ,Actors , Website, Vijay Deverakonda, Actors
× RELATED நடிகர் சங்க கட்டட பணிகளுக்காக...