×

3 பட டெக்னீஷியன்களுக்கு முழு சம்பளம் கொடுத்தார் நடிகர் விஷ்ணு

நடிகர் விஷ்ணு, 3 படங்களில் நடிக்க உள்ளார். இந்த மூன்று படங்களையும் அவரே தயாரிக்கிறார். மனு ஆனந்த் இயக்கத்தில் அவர் நடிக்கும் படம், எப்.ஐ.ஆர். கொரோனா அச்சுறுத்தலால் இதன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முரளி கார்த்திக் இயக்கத்தில் மோகன்தாஸ் படத்தை தயாரித்து நடிக்கும் விஷ்ணு விஷால், பிறகு சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் டைரக்டர் செல்லா இயக்கும் படத்தை தயாரித்து நடிக்கிறார்.
தேசிய ஊரடங்கு காரணமாக சினிமா படப்பிடிப்புகள் நடக்கவில்லை. இதனால் உதவி இயக்குனர்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.

இதையறிந்த விஷ்ணு விஷால், தனது மூன்று படங்களிலும் பணிபுரியும் அனைவருக்கும் தொடர்ந்து சம்பளம் கொடுத்து வருகிறார். இத்தகவலை இயக்குனர் அருண் வைத்தியநாதன் தனது டிவிட்டர் தளத்தில் பதிவு செய்துள்ளார். குறிப்பிட்ட 3 படங்களில் பணியாற்றும் அனைத்து டெக்னீஷியன்கள், புரொடக்‌ஷன் துறையை சேர்ந்தவர்கள், அலுவலக ஊழியர்கள் ஆகியோருக்கு முழு சம்பளத்தையும் விஷ்ணு விஷால் கொடுத்திருக்கிறார்.

Tags : Vishnu ,film technicians , 3 Image Technicians, Full Salary, Actor Vishnu
× RELATED அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு கோலப் போட்டி