×

உ.பி.யில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உத்தரப் பிரதேச அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் சுரேஷ் கண்ணா, ‘‘பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 மற்றும் டீசல் விலை ₹ஒன்றும் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி பெட்ரோல் 73.91க்கும் டீசல் லிட்டர் 63.86க்கும் விற்கப்படும்” என்றார். விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. மத்திய அரசு நேற்று முன்தினம் பெட்ரோல் மீதான கலால் வரியை 10 மற்றும் டீசலுக்கு 13 உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. இதேபோல், மதுபானங்கள் விலை பாட்டில்களுக்கு 5 முதல் 400 வரை உயர்த்தப்பட்டுள்ளது. 


Tags : UP , : Uttar Pradesh, petrol, diesel, price hike
× RELATED உ.பியில் மாற்றத்திற்கான அலை வீசுகிறது: அகிலேஷ் நம்பிக்கை