×

ஆந்திர ஆதார் இருந்தால் தான் மது: எல்லை தாண்டி போன குடிமகன்கள் ஏமாற்றம்

சென்னை: ஆந்திர மாநில மதுக்கடைகளில், அம்மாநில ஆதார் கார்டுக்கு உள்ளவர்களுக்கே மது விற்கப்படும் என்பதால், குடிமகன்கள் குஷியாக வாங்கிச்சென்றனர். இதனால் எல்லைதாண்டி ஆந்திரா சென்ற தமிழக குடிமகன்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். ஊத்துக்கோட்டை அருகே ஆந்திர மாநிலம் நாகலாபுரத்தில் 2 டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளன. இந்த கடைகளில்  நேற்று ஆந்திர மாநில குடிமகன்கள் மது வாங்க காலை 9 மணி முதலே காத்துக்கிடந்தனர். ஆனால், கடை 11 மணிக்கு திறக்கப்பட்டது. குடிமகன்கள் கடை முன்  போட்டிபோட்டு மது வாங்க முயன்றனர். அப்போது,  கடை திறந்தவுடன் விற்பனையாளர்கள் ஆதார் கார்டு மற்றும் உள்ளூர் பிரமுகர்களுக்கு மட்டும்தான் சரக்கு வழங்கப்படும் என்றனர்.

பின்னர், ஆந்திர குடிமகன்கள் சமூக இடைவெளியில்லாமல்  கொளுத்தும் வெயிலில் நீண்ட நேரம் வரிசையில் நின்று குடிமகன்கள் சரக்குகளை வாங்கினர். அவர்கள், சரக்குகள் கிடைத்த மகிழ்ச்சியின் மதுபாட்டீல்களை முத்தமிட்டபடி, அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனிடையே, தமிழகத்தில் இருந்து சரக்கு வாங்க சென்ற குடிமகன்கள்,  ஆந்திர ஆதார் உள்ளவர்களுக்கு மட்டுமே சரக்கு என்றதும் செய்வதறியாது திகைத்து நின்றனர். இதில், வசதி படைத்த குடிமகன்கள் சிலர் அதிக பணம்  கொடுத்து ஆந்திர குடிமகன்களிடம் சரக்குகளை வாங்கி குடித்து விட்டு வந்தனர்.

Tags : citizens ,Andhra Aadhaar , Andhra Aadar, Citizens, Liquors
× RELATED மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் 26,875 பேர் தபால் வாக்களிக்க ஏற்பாடு