×

1,140 வெளிமாநில தொழிலாளர்களுடன் ராஞ்சிக்கு புறப்பட்ட சிறப்பு ரயில்

சென்னை: கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வேலை பார்த்து வந்த 2 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அவர்கள், அனைவரும் திருமண மண்டபம், சமூக நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட வசதிகளை தமிழக அரசு செய்து தந்தது.இந்தநிலையில், கடந்த மே 3ம் தேதி 3வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால், வெளிமாநிலத்தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல தேவையான ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து வெளிமாநில தொழிலாளர்கள் சிலர் நடந்தே தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

அவர்கள் தமிழக எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு மீண்டும் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வெளிமாநில தொழிலாளர்களுக்கு சொந்த ஊர் செல்ல விரும்பினால், அவர்களை அனுப்பி வைக்க உள்துறை அமைச்சகம் அந்தெந்த மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. அதன்பேரில் தமிழகத்தில் சொந்த ஊர் செல்ல விரும்பும் வெளிமாநில தொழிலாளர்களை அனுப்பும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதன்பேரில் நேற்றிரவு வேலூர் மாவட்டம் காட்பாடியில் இருந்து ஜார்காண்ட் மாநிலம் ராஞ்சிக்கு செல்லும் சிறப்பு ரயில் புறப்பட்டு சென்றது. இந்த ரயிலில் 1,140 பேர் பயணம் செய்தனர்.


Tags : Ranchi , Outlander, Workers, Ranchi, Special Train
× RELATED இந்தியா கூட்டணியில் இருந்து விலகாததால் சோரன் கைது: கார்கே பேச்சு