×

பக்கத்து மாவட்டங்களுக்கு போய் சென்னைவாசிகள் சரக்கு வாங்கினால் கைது

சென்னை: சென்னையில் உள்ளவர்கள் பக்கத்தில் உள்ள திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு சென்று மது வாங்கினால் கைது செய்யப்படுவார்கள் என்று வடக்கு மண்டல ஐஜி நாகராஜ் எச்சரித்துள்ளார்.  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  சென்னையை சுற்றி உள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மதுபானக் கடைகள் இன்று திறக்கப்பட உள்ளது. இம்மூன்று மாவட்டங்களில் உள்ளோர் மட்டும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட விதிமுறைகளின் படி மதுபானக்கடை அமைந்துள்ள பகுதியில் வசிப்போர் வசிப்பிட அடையாள அட்டையுடன் வந்து மதுபானங்களை வாங்கிச் செல்லலாம்.  மதுபானக்கடைக்கு சம்பந்தமில்லாத சென்னை மாநகர் போன்ற பகுதியிலிருந்து வந்து மதுபானம் வாங்க முயற்சித்தால் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும். சம்பந்தப்பட்டவர் கைது செய்யப்படுவார்கள்.

Tags : residents ,districts ,Chennai , Chennai residents, freight, arrest
× RELATED தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் அடுத்த 3...