×

ஆல்கஹாலை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படும் சானிடைசர் ஏற்றுமதிக்கு தடை; உள்நாட்டு பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு அதிரடி

டெல்லி: ஆல்கஹாலை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படும் சானிடைசர் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. கைகளை சுத்தப்படுத்தும் போது கொரோனா வைரஸை அளிக்கும் பணிகளில் சானிடைசர் முக்கிய பங்கு வகிக்கிறது. கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவை ஆக்கிரமிக்கத் தொடங்கியதும் சானிடைசர்களுக்கு பெரிய கோரிக்கை ஏற்பட்டது. மார்ச் மாதத் தொடக்கத்தில் மட்டும் அதன் விற்பனை இங்கே 10 மடங்கு அதிகரித்திருந்தது. சானிடைசர்களில் இருக்கும் ஆல்கஹால் வைரஸ்களின் மீது செயலாற்றும். வைரஸ்களின் வெளிப்புறக் கட்டமைப்பைத் தாக்கி அதன் பரவுதலைக் கட்டுப்படுத்தும்.

அதிலும், ஆல்கஹால் அளவுமே குறைந்தபட்சம் 60 சதவிகிதம் இருந்தால் மட்டுமே பரவுதலைக் கட்டுப்படுத்த முடியும். கடந்த சில மாதங்களாக உலகத்தில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் பரிச்சயமாகிவிட்டது. கைகளில் இருக்கும் கிருமி தொற்றை முழுவதுமாக வெளியேற்ற உதவும் சிறந்த கிருமி நாசினியாக பயன்படும் சானிடைசர் கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பிறகு அதிகம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருளாகிவிட்டது. இந்நிலையில் இந்த ஆல்ஹகால் அடிப்படை சானிடைசர் வெளிநாடுகளுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுவதால் இந்தியாவில் உள்ள மக்களுக்கு குறைவான அளவே கிடைத்தது. இதனை அடிப்படையாக கொண்டு தற்போது மத்திய அரசு முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.

இதுதொடர்பாக வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சின் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் அறிக்கை வெளியிட்டது. அதில் கூறியதாவது; ஆல்கஹாலை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படும் சானிடைசர் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை, இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதால் சானிடைசர் உபயோகம் அதிகரித்துள்ளது. இதனால் உள்நாட்டு சந்தையில் சானிடைசர் அதிகமாக கிடைக்க வேண்டும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொடிய நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் சானிடைசர் ஒரு முக்கிய அங்கமாகும்.

Tags : Central Government Action , Alcohol, sanitizer, export, ban, central government
× RELATED தமிழகத்துக்கு வழங்கி வந்த கோட்டாவில்...