×

சீனாவில் இருந்து வெளியேறும் பெருநிறுவனங்களை ஈர்க்க இருமடங்கு நிலத்தை வழங்க இந்தியாவின் ராஜ தந்திரம்!!


பெய்ஜிங் : கொரோனா பாதிப்பால் சீனாவை விட்டு வெளியேறும் பன்னாட்டு நிறுவனங்களுக்காக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பல லட்ச ஏக்கர் நிலப்பரப்பு கையகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் உருவானதைத் தொடர்ந்து அங்குள்ள பல்வேறு நிறுவனங்கள் தங்கள் தொழில் மையங்களை மாற்றத் திட்டமிட்டு உள்ளன. அந்த நிறுவனங்களை ஈர்க்கும் விதமாக இந்தியா முழுவதும் 4,61,589 ஹெக்டர் நிலம் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன

இது ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான லக்சம்பர்க் என்ற நாட்டைப் போன்று இரு மடங்காகும். இதில் 1,15,589 ஹெக்டர் நிலம் ஏற்கனவே தொழிற்பேட்டைகளில் அமைந்துள்ளது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட உள்ள இந்த பெரு நிலம், தமிழ்நாடு, குஜராத், மராட்டியம், ஆந்திராவில் கையகப்படுத்தப்பட உள்ளது. கொரோனாவால் இந்தியா பொருளாதாரம் நலிவடைவதால் அதனை ஈடுகட்ட வெளிநாட்டு நிறுவனங்களை முதலீடு செய்ய வைக்க மத்திய அரசு முயன்று வருகிறது. இந்தியாவில் முதலீடு செய்ய உள்ள நிறுவனங்களை கண்டுபிடிக்க இந்திய தூதரகங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

Tags : corporates ,India ,China ,land , China, exit, corporations, attract, double, land, India, royal trick
× RELATED இந்தியா வருவதை தவிர்த்த எலான் மஸ்க் திடீர் சீன பயணம்