×

பேருந்து, ரயில் சேவைகளுக்கு மே 20-ல் அனுமதி?..ஜூன் மாதம் கோவில்களை திறக்க மத்திய அரசு ஆலோசனை

டெல்லி: மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17-ம் தேதியுடன் முடிவுக்கு வரும் நிலையில், மே 20-ம் தேதி முதல் ரயில், பேருந்து மற்றும் விமானம் போன்ற பொது போக்குவரத்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. இதை அடுத்து ஜூன் 1-ம் தேதி முதல் வழிப்பாட்டுத் தலங்கள், ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள், திருமண மண்டபங்கள் போன்ற பொது இடங்களையும் திறக்க அனுமதி வழங்கப்படும் என்று தெரிகிறது.

மேலும் இவற்றுக்குக் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதியை வழங்குவது குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஆலோசனை வழங்கியுள்ளது. இதற்கிடையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 6 முறை பிரதமர் மோடி தலைமையில் நிர்மலா சீதாராமன், அமித் ஷா மற்றும் பிற முக்கிய அமைச்சர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர். அதில் கொரோனா ஊரடங்கில் பாதிக்கப்பட்டுள்ள தொழில் துறையை மீட்டெடுப்பதற்காக ஊக்கச் சலுகைகள் வழங்குவதும் குறித்தும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : Bus, Rail Service, Central Government, Consulting
× RELATED பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு; நாளை விசாரணை!