×

காய்கறி மார்க்கெட்டுக்கு 3 மணி நேரம், மதுக்கடைக்கு 7 மணி நேரமா?: ஆந்திராவில் பெண்கள் போராட்டம்

ஹைதராபாத் :  காய்கறி மார்க்கெட்டுகள் மூன்று மணி நேரமே திறந்திருக்கும் என அறிவித்துள்ள நிலையில், மதுக்கடைக்கு மட்டும் ஏழு மணி நேரமா? என ஆந்திராவில் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர்.கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் தற்போது மூன்றாம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா வைரஸ் குறைவான மண்டலங்களில் மூன்றாம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கடைகள் அனைத்தும் அதிக நேரம் திறந்திருக்க அனுமதியளிக்கப்பட்டு உள்ளது.

ஊரடங்கு கால தொடக்கத்தில் காய்கறி மார்க்கெட்டுகள் நீண்ட நேரம் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் மக்கள் எந்த நேரமும் பொது இடங்களில் உலா வந்தனர். மேலும் பொருட்கள் வாங்கும்போது சமூக இடைவெளியை கடைபிடிக்க தவறுகிறார்கள் என்ற நிலை ஏற்பட்டது.இதனால் ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டுகள் 3 மணி நேரம் மட்டுமே திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றில் இருந்து இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. மதுக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த முடிவை எதிர்த்து விசாகப்பட்டினம் பகுதியிலுள்ள பெண்கள் திடீரென வீதிக்கு வந்து போராட்டம் நடத்தினர். அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் காய்கறி மார்கெட்டுகள் மூன்று மணி நேரமும், மதுக்கடைகள் ஏழு நேரம் செயல்படுவதும் முறையில்லை. இது முற்றிலும் நியாயமானதாக இல்லை என தெரிவித்துள்ளனர்.

Tags : bartenders ,Women ,Andhra Pradesh. , Vegetable, Market, 3 pm, Time, Bartender, 7 pm, Andhra, Women, Struggle
× RELATED கொளுத்தும் வெயிலுக்கு மரம்...