×

அதிமுக அரசின் கண்கள் திறக்கட்டும்: மதுக்கடைகள் திறப்பதை கண்டித்து நாளை கருப்பு சின்னம் அணிவோம்... பொதுமக்களுக்கு திமுக கூட்டணி வேண்டுகோள்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைதொடர்ந்து பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில், மாநிலம் முழுவதும்  செயல்பட்டு வந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆந்திரா, கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஆந்திரா,  கார்நாடகா எல்லைப்பகுதிகளில் உள்ள குடிமகன்கள் மதுவாங்க அதிகாலையிலேயே சென்றனர்.

இதனால், கர்நாடகா, ஆந்திரா எல்லை பகுதிகளில் உள்ள மதுக்கடைகளில் கூட்டம் அலை மோதியது. இந்த நிலையில் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் உள்ள மதுக்கடைகளுக்கு தமிழக எல்லை பகுதியில் உள்ள மக்கள் அதிக அளவில்  செல்வதால் மாநிலங்களுக்கு இடையேயான மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமம் ஏற்படுவதாக கூறி தமிழக அரசு நாளை முதல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுபான கடைகள் திறக்கப்படும் என்று  அறிவித்தது. ஆனால், சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் நாளை திறக்கப்படாது. இந்த கடைகள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தது. இருப்பினும், டாஸ்மாக் கடைகள் திறக்கும் தமிழக அரசின் முடிவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மதுக்கடைகளை திறக்கும் அதிமுக அரசைக் கண்டித்து நாளை கருப்பு சின்னம் அணிவோம் என தமிழக மக்களுக்கு திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பாக வெளியிடப்பட்ட  கூட்டறிக்கையில், கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் அலட்சியமும், மதுக்கடைகளைத் திறப்பதில் ஆர்வமும் காட்டும் அ.தி.மு.க. அரசைக் கண்டித்து மே 7 அன்று, கருப்புச் சின்னம் அணிவீர்தமிழக மக்களுக்கு தி.மு.க. தலைமையிலான  அனைத்துக் கட்சி கூட்டணித் தலைவர்களின் வேண்டுகோள்! கொரோனா நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி, மக்களிடையே ஏற்படுத்திவரும் பாதிப்பும் - இழப்பும், அச்சம் தருவதாக உள்ளது. பாதிக்கப்படுவோரின் எங்ணிக்கை இதே  கதியில் தொடருமானால், அது எங்கே போய் முடியுமோ என்று எங்ணிப் பார்க்கவே இதயம் படபடக்கிறது.


ஆனால், மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க. அரசின் அணுகுமுறைகளையும் - முடிவுகளையும் - நடவடிக்கைகளையும் பார்த்தால், கொரோனா குறித்த முழுமையான பார்வையும், ஏழை - எளிய, நடுத்தர மக்களின் எதிர்காலம் பற்றிய சரியான  கணிப்பும் போதிய அளவுக்கு இல்லை என்று தோன்றுகிறது. கொரோனா கடுமையாகப் பரவிவரும் நிலையில், ஏதேதோ புள்ளிவிவரங்களைச் சொல்லி, சமாதானப்படுத்தும் முயற்சி தெரிகிறதே தவிர; அடிப்படையான உண்மைகளை ஒளிவு  மறைவின்றி வெளியிட்டு, அனைவரையும் உணரச் செய்து, ஒத்துழைப்பைக் கோரி, உடன் அழைத்துச் செல்லும் எண்ணம் அரசுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

கொரோனாவை எதிர்கொள்ளத் தேவைப்படும் மருத்துவக் கட்டமைப்பை உருவாக்கிடக் கிடைத்த வாய்ப்பினைக் கைநழுவ விட்டார்கள்; தொடக்கத்திலேயே, தலைநகரத்திலும் ஏனைய மாவட்டங்களிலும், மக்கள்தொகை அடந்த்தியின்  அடிப்படையில், தீவிரமாகப் பாதிக்கப்படப் போகும் பகுதிகளை அடையாளப்படுத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் போதுமான கவனம் செலுத்தவில்லை. இது மறைமுக எதிரியுடன் நடத்தப்படும் போர்; போர்க் காலத்தில் அடி முதல் நுனி வரை ஒருங்கிணைப்பும், கடமையும், பொறுப்பும், இவற்றைப் பரவலாக்குதலும் அவசியம்! அ.தி.மு.க. அரசில் அறிவியல் பூர்வமான ஒருங்கிணைப்பு இல்லை; அதிகாரத்தை மையப்படுத்துவதிலேயே அரசு கவனம்  செலுத்துவதாகத் தெரிகிறது.

போர்க் காலத்தில் அரசியலுக்கு இடமில்லை! ஆனால், அ.தி.மு.க. அரசு, அரசியல் கணக்குப் போட்டு, பல தரப்பிலிருந்தும், குறிப்பாக, எதிந்க்கட்சிகள் - ஊடகங்கள் - வல்லுநந்கள் மற்றும் சான்றோநர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளைப் பரிசீலனை செய்யும் மனநிலையில் இல்லை. தாமதமாகவேனும் உணரும் நிலைமை இருக்கிறதா என்று பாந்த்தால், அதுவும் காணப்படவில்லை என்பது வருந்துதற்குரியது.

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அதிமுக அரசு அலட்சியம் காட்டுகின்றன. எனவே, தமிழக மக்கள் அணியபோகும் கருப்பு சின்னம் அதிமுக அரசின் கண்களை திறக்கட்டும். டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறப்பதால் சமூக தொற்று  மேலும் பரலாகும். தடுப்பு பணியில் உள்ளோருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததைக் கண்டிக்கிறோம். அலட்சியமும், ஆணவமும் கொண்ட தமிழக அரசுக்கு, கொரோனா நோய்த் தொற்று தமிழகத்தில் ஏற்படுத்தி வரும் பெரும் பாதிப்பை உணந்த்திடும் வகையில் தமிழக மக்கள் அனைவருண் கருப்புச் சின்னம் அணிந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்திட வேண்டிக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. தமிழக மக்கள் அணியப் போகும் கருப்புச் சின்னம், அ.தி.மு.க. அரசின் கண்களைத் திறக்கட்டும்!என்று குறிப்பிடத்தப்பட்டுள்ளது.



Tags : AIADMK ,government ,liquor shops ,opening ,DMK ,public , Let's open the eyes of the AIADMK government: We will wear a black symbol tomorrow to protest the opening of liquor shops ...
× RELATED பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்...