×

செய்யாறில் தொழிற்சாலையை திறக்க மக்கள் எதிரிப்பு..: அதிக ஊழியர்கள் வரவழைப்பு என புகார்

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே அதில ஊழியர்களுடன் தொழிற்சலையை இயக்க எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. செய்யாறு அருகே உள்ள மங்கல் என்ற இடத்தில் தைவான் நாட்டு காலணி தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலை 40 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவு பணியாளர்களை கொண்டு தொழிற்சாலையை திறக்க அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், இந்த தொழிற்சாலையில் அதிக அளவு தொழிலாளர்கள் பணிக்கு வந்ததால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தொழிற்சாலையை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பஞ்சாயத்து தலைவர்கள் 20 பேர் உட்பட பலர் தொழிற்சாலையை முற்றுகையிட்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் சிவப்பு மண்டலமாக உள்ளது. அதனால அதிக அளவில் ஊழியர்களை கொண்டு பணிகளை இயக்க வேண்டாம் என்று பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். அதிக அளவில் ஊழியர்களை சேர்த்தால் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 


Tags : factory , People,opposition , open ,factory ...
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...