×

ஒரு மாத காலமாக கொரோனா வார்டில் பணிபுரிந்து திரும்பிய செவிலியர்: மலர்தூவி, ஆரத்தி எடுத்து வரவேற்ற குடியிருப்புவாசிகள்!!

மும்பை : கடந்த ஒரு மாத காலமாக கொரோனாவுக்கு எதிராக போராடி பணி செய்த செவிலியருக்கு அவர் வசிக்கும் குடியிருப்பு பகுதியின் வாசிகள் மலர்தூவி வரவேற்பு அளித்தனர். கொரோனா நோய் பரவாமல் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கடந்த 43 நாட்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றும் கையில் கடந்த 6 வாரங்களாக தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் களப்பணியில் உயிரைப் பற்றி கவலைப்படாமல் மருத்துவர்கள், நர்சுகள், தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக கொரோனாவுக்கு எதிராக போராடி பணி செய்த செவிலியருக்கு அவர் வசிக்கும் குடியிருப்பு பகுதியின் வாசிகள் மலர்தூவி வரவேற்பு அளித்தனர். மகாராஷ்டிராவின் ராதிகா விஞ்சுர்கர் என்ற செவிவியர் நாக்பூரில் உள்ள இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் கடந்த ஒரு மாதமாக பணியாற்றியுள்ளார்.ஒரு மாதத்திற்கு பிறகு வீடு திரும்பிய அவரை அவர் வசிக்கும் குடியிருப்பு பகுதியின் வாசிகள் மலர்தூவி வரவேற்பு அளித்தனர். செவிலியருக்கு ஆரத்தி எடுத்தும், கைத்தட்டியும் வரவேற்பு அளிக்கப்பட்டது. மக்களின் வரவேற்பை கொஞ்சமும் எதிர்பாராத செவிலியர், உணர்ச்சிமிகுதியில் கண் கலங்கினார்.

Tags : nurse ,Corona Ward ,Residents , Corona, Ward, Working, Nurse, Flower, Orthi, Residents
× RELATED சைரன் விமர்சனம்