×

ராயபுரம், தண்டையார்பேட்டையில் நேற்று ஒரே நாளில் சுகாதாரத்துறை ஊழியர் உள்பட44 பேருக்கு கொரோனா தொற்று

தண்டையார்பேட்டை: சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தண்டையார்பேட்டை, ராயபுரம் மற்றும் திருவிக நகர் மண்டலங்களில் நோய் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  இந்நிலையில், ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட வண்ணாரப்பேட்டை சண்முகராஜன் தெரு, பல்லவன் சாலை, காந்தி நகர், தங்கசாலை உள்ளிட்ட பகுதியில் நேற்று ஒரே நாளில் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அந்த பகுதி சாலைகள் சீல் வைக்கப்பட்டனஇதேபோல், தண்டையார்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட வண்ணாரப்பேட்டை மேயர் பாசுதேவ் தெருவில், வீடு வீடாக கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட சுகாதாரத்துறை பெண் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, அவரது கணவர், குழந்தை உள்ளிட்ட அந்த வீட்டில் வசிக்கும் 20க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதில் தண்டையார்பேட்டை வரதராஜன் தெருவில் ஒருவருக்கும், நேதாஜி நகரில் பெண் ஒருவருக்கும், வண்ணாரப்பேட்டையில் 3 பேருக்கும் என 20க்கும் மேற்பட்டோருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்குள்ள சாலைகள் மூடப்பட்டு சுகாதாரத்துறை அதிகாரி கட்டுப்பாட்டில் உள்ளது. வட சென்னையில் தொடர்ந்து நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் முறையான பாதுகாப்பு ஏற்பாடு செய்யவில்லை, என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.புழல் : புழல் அடுத்த கதிர்வேடு சீனிவாசன் நகர் பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடி  குடியிருப்பை சேர்ந்த 32 வயது வாலிபர், கோயம்பேடு மார்க்கெட்டிற்கு சென்று காய்கறிகள் வாங்கி வந்து வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதேபோல், செங்குன்றம் அடுத்த கிராண்ட் லைன் அன்னை நகர் கரிகால சோழன் 7வது தெருவை சேர்ந்த 33 வயது நபருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவரை அரசு பன்னோக்கு மருத்துமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில், இவரது மாமியார் மற்றும் தங்கை கணவருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இருவரையும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலத்தில் ஏற்கனவே 29 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 9 பேர் குணமடைந்த நிலையில், 20 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர்.

இந்நிலையில், நேற்று எண்ணுாரை சேர்ந்த ஆவின் ஊழியரான 25 வயது பெண், கோயம்பேடு மார்க்கெட் வியாபாரியான சுனாமி குடியிருப்பை சேர்ந்த 55 வயது முதியவர், 8 வயது சிறுமி உட்பட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் திருவொற்றியூர் மண்டலத்தில் பாதித்தோர் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்தது. மணலி மண்டலத்தில் இதுவரை 10 பேர் கொரோனா தொற்றால் பாதித்திருந்தனர். இந்நிலையில் நேற்று மாத்தூரை சேர்ந்த ஆவின் ஊழியரான 55 வயது நப, 20 வது வார்டில் 38 வயது நபர் மற்றும் கோயம்பேடு மார்க்கெட் வியாபாரியான 44 வயது நபருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மணலியில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.

Tags : Coronavirus ,health worker ,Rayapuram ,Tondiarpet , Royapuram, Dandiarpet, Health Department, Corona
× RELATED சென்னை ராயபுரத்தில் பாதுகாப்பு கருதி...