×

நடிகை ரோஜா உட்பட 5 எம்எல்ஏக்கு நோட்டீஸ்: உயர்நீதிமன்றம் அதிரடி

திருமலை: ஆந்திராவில் ஊரடங்கை மீறியதாக நடிகை ரோஜா உட்பட 5 ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு உயர் நீதிமன்றம் அதிரடியாக நோட்டீஸ் அளித்துள்ளது.
கொரோனா பரவுவதை தடுக்க விதிக்கப்பட்ட ஊரடங்கை மீறியதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நடிகை ரோஜா உட்பட 5 எம்எல்ஏக்களுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.   அதன்படி, காளஹஸ்தி எம்எல்ஏ மதுசூதன், நகரி எம்எல்ஏ நடிகை ரோஜா, சூலூர்பேட்டை எம்எல்ஏ சஞ்சீவியா, பலமனேர் எம்எல்ஏ வெங்கடகவுடா மற்றும் சிலக்கலூர்பேட்டை எம்எல்ஏ ரஜினி ஆகிய 5 பேரும் ஊரடங்கு  விதிமுறைகளை மீறி பொதுமக்களை கூட்டி நலத்திட்ட உதவிகளை வழங்கியதாக வழக்கறிஞர்  கிஷோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற உயர் நீதிமன்றம் காணொளி காட்சி மூலம் நேற்று விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் வழக்கறிஞர் கிஷோர் சார்பில் வழக்கறிஞர் இந்திரனில் பாபு ஆஜராகி வாதங்களை முன் வைத்தார். இதையடுத்து இதுதொடர்பாக விளக்கமளிக்க 5 எம்எல்ஏக்களுக்கும் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அளித்து உத்தரவிட்டது.

Tags : MLA ,actress ,Rose: High Court , Actress Rose, 5 MLAs, Notice, High Court
× RELATED கொரோனாவால் பாதிக்கப்பட்ட கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ குணமடைந்தார்