×

இந்தா கண்டுபிடிச்சுட்டோம்ல... மடகாஸ்கர் அதிபர் அறிவிப்பு: கொரோனாவுக்கு மூலிகை மருந்தை குடித்தால் போதும் என்கிறார்

அந்தனநாரிவோ: கொரோனாவை கட்டுப்படுத்த, மூலிகை மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது என்று மடகாஸ்கர் அதிபர் ஆன்ட்ரே ரெஜோலினா அறிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க அதிதீவிர முயற்சிகள் நடந்து வருகிறது. இதுவரையில் உரிய பலன் கிடைக்கவில்லை. இந்தியாவில் பல்வேறு சித்த, ஆயுர்வேத மருந்துகள் மூலம் இந்நோயை வராமல் தடுப்பற்கான எதிர்ப்பு சக்தியை பெற முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த தங்கள் நாட்டில் மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது என்று மடகாஸ்கர் அதிபர் ஆன்ட்ரே ரெஜோலினா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டிவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: மடகாஸ்கர் தீவுகளில் காணப்படும் ஆர்டிமீசியா என்ற தாவரத்தில் இருந்து மலேரியாவுக்கு மருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த மருந்து கொரோனா நோயையும் அழிக்கும் திறன் பெற்றுள்ளது. இந்த புதிய மருந்துக்கு ‘கோவிட் ஆர்கானிக்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. மலகாசி மருத்துவ ஆராய்ச்சி மையம் இந்த மருந்தை உருவாக்கியுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, நேற்று அந்நாட்டு தலைநகர் அந்தனநாரியோவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இதுபற்றி விளக்கிய அதிபர் ஆன்ட்ரோ, புதிய மருந்தை குடித்தும் காண்பித்தார். மடகாஸ்கரில் கொரோனா நோய்த் தொற்றினால் இதுவரை 128 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், அங்கு உயிரிழப்பு ஏதுவும் இல்லை.

Tags : President ,Madagascar ,Corona , Madagascar's President, André rejolina, Corona, herbal medicine,
× RELATED ரஷ்யாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள்...