×

கொரோனா வைரஸ் இன்னும் சமூக பரவலாக மாறவில்லை: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பேட்டி

* ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் தற்போது நல்ல விளைவு ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி: கொரோனா வைரஸ் இன்னும் சமூக பரவலாக மாறவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார். கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் 195 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். புதிதாக 3900 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை  தெரிவித்துள்ளது.  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்தநிலையில் கொரோனா பாதிப்பின் 3வது நிலையான சமூக பரவல் என்ற நிலையை எட்டிவிட்டதாக சந்தேகம் எழுப்பப்பட்டது.  இது தொடர்பாக நேற்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அளித்த பேட்டியில் `இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமூக பரவல் என்ற நிலையை இன்னும் எட்டவில்லை’ என்று தெரிவித்தார்.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வால் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: கொரோனாவுக்கு இதுவரை இந்தியாவில் 1568 ேபர் பலியாகியுள்ளனர். மொத்தம் 46,433 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 195 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். 3900 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச பாதிப்பு. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் தற்போது நல்ல விளைவு ஏற்பட்டுள்ளது. அதாவது முன்பு 3.4 நாளில் பாதிப்பு எண்ணிக்கை இருமடங்காக இருந்த நிலையில் அது தற்போது 12 நாளுக்கு இருமடங்கு என குறைந்துள்ளது.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Harshavardhan ,Interview , Harshvardhan, Minister of Health, Coronavirus
× RELATED மக்களவை தேர்தலில் திமுக சார்பில்...