×

திருவள்ளூர் அருகே பரபரப்பு: பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்: இருவர் கைது,.. 7 பேருக்கு வலை

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த வயலூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேந்தர். இவருக்கு கடந்த 2ம் தேதி பிறந்த நாள். இவரை ஒரு தாதா ரேஞ்சுக்கு உயர்த்த நினைத்த அவரது நண்பர்கள், சுரேந்திரனின் பிறந்தநாளை வித்தியாசமான முறையில் கொண்டாடத் தீர்மானித்தனர். இதன்படி 2ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு, வயலூர் சாலையில் அவரது நண்பர்களான ராகுல் தீபன்ராஜ் (19), அருண்குமார் (18) உட்பட 8 பேர் புடைசூழ தனது பிறந்தநாளை கொண்டாடினார். இந்நிலையில், பிறந்தநாள் கேக்கினை, பெரிய பட்டா கத்தியால் வெட்டி அலப்பறை செய்து நண்பர்களுடன் அதனை வீடியோ எடுத்தார்.

அத்துடன் அந்த வழியாக சென்ற பொதுமக்களையும் பட்டாக் கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுசம்மந்தமான வீடியோ வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  இது போலீசாரின் கவனத்தையும் எட்டவே, உஷாரான மப்பேடு போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, ராகுல் தீபன்ராஜ், அருண்குமார் ஆகிய இருவரை கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடமிருந்த பட்டாக்கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து தலைமறைவாக உள்ள சுரேந்தர் உட்பட 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


Tags : Birthday celebration ,Tiruvallur ,Persons , Thiruvallur, knife, cake cutter, birthday, two arrested, curfew, corona
× RELATED நோய் தொற்றில் இருந்து...