×

‘பெண்களுக்கு மது குடிக்க உரிமை இருக்கிறது’: ராம்கோபால் வர்மாவுக்கு பாலிவுட் பாடகி பதிலடி

பெங்களூரில் ஆயிரக்கணக்கான குடிமகன்கள் நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கிக் சென்றனர். குறிப்பாக பெங்களூரில் பெண்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் சென்றது நாடெங்கும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இதுகுறித்து பிரபல சினிமா இயக்குனர் ராம்கோபால் வர்மா தனது டுவிட்டரில் பெண்கள் மது வாங்க வரிசையில் காத்திருக்கும் போட்டோவை பதிவிட்டு, “மதுபானக் கடையில் யார் நிற்கிறார்கள் என்று பாருங்கள். குடிகார ஆண்களிடமிருந்து பெண்களைக் காக்க வேண்டும் என்று இப்போதும் பேசி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

அவரது கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் மாறி மாறி வந்தது குறிப்பாக பாலிவுட் பாடகி சோனா மொகபத்ரா இதற்கு பதில் அளித்து கூறியிருப்பதாவது: ஆண்களை போலவே, பெண்களுக்கும் மதுபானம் வாங்கவும் குடிக்கவும் உரிமை இருக்கிறது. ஆனால், குடித்துவிட்டு வன்முறையில் இறங்குவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. என்று தெரிவித்துள்ளார்.

Tags : singer ,Ramkopal Verma 'Women , Women, Madhu, Ramkopal Verma, Bollywood singer
× RELATED பெண்கள் மீதான வன்முறைகளை...