×

10ம் வகுப்பு தேர்வு அட்டவணை ஜூனில் வெளியீடு: செங்கோட்டையன் பேட்டி

கோபி: ஈரோடு மாவட்டம் கோபியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அட்டவணை தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. கொரோனா தாக்கம் குறைந்தவுடன் ஜூன் மாதத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்ேதர்வுக்கான அட்டவணை வெளியிடப்படும். மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமும், கல்வி தொலைக்காட்சி மூலமும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.  பிளஸ்-2 விடைத்தாள்  திருத்தும் பணி ஜூன் மாதத்தில் தொடங்கும். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

Tags : 10th Class Examination Table, Sengottaiyan
× RELATED மே7 முதல் நீலகிரி மாவட்டத்துக்கு வரும்...