×

சென்னையில் இருந்து தேனி வந்த இயக்குநர் பாரதிராஜா தனிமைபடுத்தப்பட்டார்

தேனி:  பிரபல திரைப்பட இயக்குனர் பாரதிராஜா, தேனி என்ஆர்டி நகரில் உள்ள தனது வீட்டிற்கு, சென்னையிலிருந்து நேற்று முன்தினம் வந்தார். இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பாரதிராஜாவின் சளி, ரத்த மாதிரிகளை தேனி அல்லிநகரம் நகராட்சி சுகாதாரத்துறையினர் சேகரித்து, தேனி அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  அங்கு நடந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. இருப்பினும் தொடர்ந்து 14 நாட்கள் பாரதிராஜா, தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சுகாதாரத்துறை தெரிவித்தது. இதையடுத்து இயக்குநர் பாரதிராஜா அவரது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார். தேனி - அல்லிநகரம் நகராட்சி நிர்வாகம் சார்பில், இயக்குநர் பாரதிராஜா வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்ற நோட்டீசை ஒட்டியுள்ளனர்.


Tags : Bharathiraja ,Theni ,Chennai , Chennai, Theni, Director Bharathiraja, Corona, Curfew
× RELATED தேனியில் தபால் ஓட்டுக்கான...