×

மீண்டும் தூசி பறக்கும் நெல்லையப்பர் நெடுஞ்சாலை: வாகன ஓட்டிகள் அவதி

நெல்லை: நெல்லை டவுன் நெல்லையப்பர் நெடுஞ்சாலை நேற்று வாகனங்கள் வரத்து அதிகரிப்பால் புழுதிமயமாக காட்சியளித்தது. நெல்லை டவுன் நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் ஆர்ச் தொடங்கி ஸ்ரீபுரம் ஸ்டேட் வங்கி வரை குடிநீர் குழாய்கள் பதிப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டு மூடப்பட்டன. இருப்பினும் சாலை சரிவர சீரமைக்கப்படாத காரணத்தால், குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. சாலையின் 4 சக்கர வாகனங்கள் சென்றாலே புழுதி பறக்கும் சூழல் காணப்பட்டது.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து குறைந்தது.

அச்சாலையில் கிழக்கு வரும் வாகனங்களும், மேற்கு செல்லும் வாகனங்களும் ஒருவழிப்பாதையை ஊரடங்கு காலத்தில் கடைப்பிடித்து வந்தன. இதனால் குழிகள் தோண்டப்பட்ட பாதையில் வாகன போக்குவரத்து அதிகளவில் இல்லை. இந்நிலையில் நேற்று ஊரடங்கு தளர்வு காரணமாக நெல்லை டவுனில் வாகன போக்குவரத்து அதிகரித்தது. இதனால் மேடும், பள்ளமுமாக காட்சியளிக்கிற நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் பல வாகனங்கள் நெல்லை சந்திப்பை நோக்கி வந்தன. அச்சாலை மீண்டும் புழுதி மயமாக காட்சியளித்தது. வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தோடு வாகனங்களை அச்சாலையில் ஓட்டி சென்றனர்.

Tags : highway ,motorists , Dust again, the gooseberry highway
× RELATED கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி 6 பேர் படுகாயம்!