×

குடை பிடித்து வந்தால் மட்டுமே மதுபானம்; சமூக இடைவெளியை பின்பற்ற திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் குடை பிடித்து வருபவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் கடையில் மதுபானம் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். திருப்பூரில் டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதை உறுதி செய்ய ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழகத்தில் வரும் 7 ஆம் தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு  காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டன.

இந்த நிலையில், வரும் 7 ஆம் தேதி முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தடை செய்யப்படாத பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் திறக்கப்படும். தமிழகத்தில் மீண்டும் மதுக்கடைகளை திறக்கக்கூடாது பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்த நிலையில், மதுக்கடைகளை திறக்க  தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் குடை பிடித்து வருபவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் கடையில் மதுபானம் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

திருப்பூரில் டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அத்தியாவசியத் தேவைகளுக்காகக் கடைகளுக்குச் செல்லும் திருப்பூர் மாவட்ட பொதுமக்கள் கையில் ஒரு குடை எடுத்துச் சென்றால், தனி மனித விலகல் கடைப்பிடிக்கப்பட்டு கொரோனா தொற்றில் இருந்து நம்மைப் பாதுகாக்க முடியும் என திருப்பூர் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் ஏற்கனவே தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டாஸ்மாக் கடையில் பணிபுரியும் ஊழியர்கள் கட்டாயமாக மாஸ்க் அணிந்து பணிபுரிய வேண்டும்.

Tags : brewery ,Tirupur District Collector , Umbrella, Brewery, Social Gap, Tirupur, District Collector
× RELATED புதிய பத்திரப்பதிவு அலுவலகம் அமைக்க வலியுறுத்தல்