×

ஊரடங்கு உத்தரவால் பட்டினியில் வாடும் சர்க்கஸ் குடும்பத்தினர்: அரசு உதவி செய்ய கோரிக்கை

தொண்டி: தொண்டி அருகே ஆண்டாவூரணி கிராமத்தில் சர்க்கஸ் நடத்துவதற்காக வந்த குடும்பத்தினர் 20 பேர் ஊரடங்கு உத்தரவால் ஊருக்கு போக முடியாமல் சாப்பாட்டிற்கும் வழி இல்லாமல் தவித்து வருகின்றனர். அரசு உதவ வேண்டும் என கோரிக்கை வஇடுத்துள்ளனர்.சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த முத்து, தனது குடும்ப உறுப்பினர்கள் குழந்தை உட்பட 20 பேருடன் கடந்த மாதம் தொண்டி அருகே உள்ள ஆண்டாவூரணி கிராமத்திற்கு சர்க்கஸ் நடத்துவதற்காக வந்தனர். வந்த இரண்டாவது நாள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதால் அப்பகுதியில் நடைபெற இருந்த திருவிழாவும் நிறுத்தப்பட்டது. இதனால் கையில் இருந்த பணமும் செலவு செய்யப்பட்டு அனைவரும் பசியும் பட்டியுமாக வாடியுள்ளனர். இதையறிந்த கிராம மக்கள் தங்களால் முடிந்த அளவு உதவி செய்துள்ளனர். இருப்பினும் குடும்ப உறுப்பினர்கள் அதிகம் என்பதால் வறுமையில் வாடும் இவர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 இதுகுறித்து முத்து கூறுகையில், ‘ஒவ்வொரு வருடமும் இப்பகுதிக்கு சர்க்கஸ் நடத்துவதற்காக வருவோம். பங்குனி மற்றும் சித்திரை மாத்தில் இந்த ஊரை சுற்றியுள்ள கிராம பகுதியில் திருவிழா நடக்கும். அதனால் அனைத்து பகுதியிலும் சர்க்கஸ் நடத்தி நல்ல வருமானம் பார்ப்போம். இந்த வருடம் நாங்கள் இங்கு வந்த அடுத்த நாள் முதல் ஊரடங்கு உத்தரவால் கஷ்டப்படுகிறோம். வருமானத்திறக்கும் வழி இல்லை. ஊர் போகவும் முடியவில்லை. ஒட்டகம், குதிரை உள்ளிட்ட விலங்குகளுக்கும் உணவு இல்லாமல் சிரமப்படுகிறோம். பச்சிளம் குழந்தைகளை பார்ததுவிட்டு கிராம மக்கள் அவ்வப்போது உதவி செய்கின்றனர். எங்களுக்கு அரசு நிவாரண உதவி கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.



Tags : Circus families , Circus , curfew, demand ,government ,assistance
× RELATED ரோந்து வாகனங்கள் மூலம் தேர்தல்...