×

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் காட்சி பொருளாக மாறிய கை கழுவும் இடம்: விழிப்புணர்வு ஏற்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

திருவண்ணாமலை:  திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் காட்சி பொருளாக மாறிய கை கழுவும் இடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலத்திற்கு நாள் தோறும் பல்வேறு பணிகளுக்காக பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அதுமட்டுமின்றி அலுவலக ஊழியர்களுக்கும் வந்து செல்கின்றனர். கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள், கைகளை கிருமிநாசினி மூலம் நன்றாக கழுவிய பின்னரே, அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு, கலெக்டர் அலுவலக வளாகத்தில் 3 இடங்களில் கை கழுவும் இடம் அமைக்கப்பட்டுள்ளது.

இது நடைமுறை படுத்தப்பட்ட சில நாட்கள் மட்டுமே கடைபிடிக்கப்பட்டது. அதன்பிறகு, கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களும், அலுவலக ஊழியர்களும், கிருமிநாசினியை கொண்டு கைகளை கழுவாமல் அலுவலகத்திற்கு சென்று வருகின்றனர்.இதனால், அங்கு அமைக்கப்பட்டுள்ள கை கழுவுடம் இடம் காட்சி பொருளாக இருந்து வருகிறது. மேலும், நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களிடமும், அரசு ஊழியர்களிடமும், போதிய விழிப்புணர்வு இல்லாதது வேதனையாக உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.



Tags : collector ,Thiruvannamalai ,office ,community activists ,Thiruvannamalai Collector , Thiruvannamalai ,Collector, Office
× RELATED திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக...