×

ஓசூர் பகுதியில் தோட்டத்திலேயே வீணாகும் தக்காளி: கால்நடைகளை மேய விடும் அவலம்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி உள்ளிட்ட பகுதியில் ஏராளமான விவசாயிகள், ஏக்கருக்கு ஒரு லட்சம் செலவு செய்து தக்காளி பயிரிட்டுள்ளனர். சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால், மகசூல் அதிகரித்துள்ளதாலும் கொரோனா பாதிப்பால் விற்பனைக்கு வழியில்லாததாலும் பறிக்காமல் தோட்டத்திலேயே விடும் அவலநிலை காணப்படுகிறது. ஒரு சில இடங்களில் தக்காளி தோட்டத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடும் நிலை காணப்படுகிறது. ஓசூர் மற்றும் அதை சுற்றியுள்ள சூளகிரி, கெலமங்கலம், பாகலூர் உள்ளிட்ட பகுதியில் தக்காளியை அறுவடை செய்ய முடியாமல் செடியிலேயே விடும் நிலை காணப்படுகிறது.

தக்காளியை வாங்க வியாபாரிகள் வராததால், சாகுபடிக்காக வாங்கிய கடனை அடைக்க முடியாமல் விவசாயிகள் தவிப்பிற்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், ‘விலை குறைந்துள்ளதால் தக்காளியை வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை. தக்காளியை அறுவடை செய்தாலும் கூலி கொடுக்கும் அளவிற்கு வருவாய் கிடைப்பதில்லை. எனவே, பாதிக்கப்பட்டுள்ள தக்காளி விவாசாயிகளுக்கு, அரசு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றார்.Tags : region ,Hosur Region: Cattle ,Hosur , Hosur ,region, Tomatoes , Garden,Cattle graze
× RELATED கடந்த 30 ஆண்டுகளில் உலகின் ஒவ்வொரு...