×

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படத்திற்காக 3 பேருக்கு புலிட்சர் விருது அறிவிப்பு

ஸ்ரீநகர்: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்ட போது, மக்கள் மீது ஏவப்பட்ட ஒடுக்குமுறைகளை படம் பிடித்தவர்களுக்கு புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 5ம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு வந்த சட்டப்பிரிவு 370 மற்றும், 35ஏ-வை ரத்து செய்தது. இதைத்தொடர்ந்து, அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், ராணுவத்தினர் குவிக்கப்பட்டதுடன், இணையதளம் மற்றும் மொபைல் சேவைகள் முடக்கப்பட்டது. மேலும், அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டனர். இந்த சூழலில் காஷ்மீரில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டு வந்தது.

இணையதளம், மொபைல் நெட்வொர்க் போன்றவை முடக்கப்பட்டன. காஷ்மீருக்கு வெளியே படிப்புக்காகவும் வேலைக்காகவும் சென்றிருந்த காஷ்மீர் மக்கள் தங்களின் குடும்பத்தினர் நிலை குறித்து தெரியாததால் கடுமையான இன்னல்களைச் சந்தித்தனர். காஷ்மீருக்குள் வெளிமாநில மக்கள் அனுமதிக்கப்படவில்லை. ஜம்மு - காஷ்மீரில் கடுமையான மனித உரிமை மீறல்கள் நடப்பதாக, பாகிஸ்தான் உலக நாடுகளிடம் முறையிட்டது. எனினும் இந்தியா, `காஷ்மீர் என்பது உள்நாட்டு விவகாரம்’ என யாரையும் உள்ளே அனுமதிக்க மறுப்பு தெரிவித்து விட்டது. இந்தக் கடுமையான காலகட்டத்தில் காஷ்மீர் பகுதியில் பணியாற்றிய மூன்று இந்திய புகைப்படக் கலைஞர்களுக்கு உலகின் மிக உயரிய விருதான `புலிட்சர் விருது’ வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இலக்கியம், பத்திரிகை, ஆன்லைன் ஜர்னலிசம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு கடந்த 1917-ம் ஆண்டு முதல் புலிட்சர் எனப்படும் உயரிய விருது வழங்கப்படுகிறது. இதில் 2020 க்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த பத்திரிகையாளர்களான தர் யாசின், முக்தர்கான், சானி ஆனந்த் ஆகிய மூவர் புலிட்சர் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளனர். இவர்கள் ஏ.பி. உள்ளிட்ட முன்னணி பத்திரிகையில் புகைப்பட கலைஞர்கள் எனவும் கடந்த ஆண்டு காஷ்மீரில் ஊரடங்கின் போது ஏற்பட்ட வன்முறை காட்சிகளை வித்தியாச கோணத்தில் எடுத்த புகைப்படம் பாராட்டை பெற்றது. இதையடுத்து அவர்கள் இந்த உயரிய விருதுக்கு தேர்வு பெற்றனர்.


Tags : Kashmir ,Announcements , Kashmir, special status, Pulitzer Prize
× RELATED குங்குமப்பூவின் நன்மைகள்!