×

கோயம்பேடை காப்பாற்ற இயலாத அரசு டாஸ்மாக்கை திறக்குமாம் : கமல்ஹாசன் சாடல்

சென்னை : தமிழகத்திலும் டாஸ்மாக் மதுபான கடைகள் நாளை மறுநாள் திறக்கப்படும் என்ற அறிவிப்புக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. தமிழகத்தில் 40 நாட்களுக்கும் மேலாக டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டு உள்ளன. இந்த நிலையில் ர் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

எனினும் மதுக்கடை பார்கள், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மதுபான கடைகள் திறக்கப்படமாட்டாது என உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அரசு மதுக்கடைகளை திறக்க உத்தரவிட்டுள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ள கமலஹாசன், “கோயம்பேடை காப்பாற்ற இயலாமல் தொற்று எண்ணிக்கையை அதிகப்படுத்திய அரசு, இப்பொழுது டாஸ்மாக்கை திறக்குமாம். அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலி வாங்குவது புரியவில்லையா தலைமைக்கு! ” என குறிப்பிட்டுள்ளார்.

Tags : Tasmak ,government ,Coimbatore ,Kamal Haasan , Government, Lives, Kills, Tasks, Opening, Kamal Haasan, Tweet
× RELATED கடமலைக்குண்டு அருகே காட்டு யானைகளால்...