×

11 நாட்களில் கொரோனா நோயாளிகளை குணப்படுத்தும் ரெம்டெசிவிர்.! : அமெரிக்கா சற்று நிம்மதி..!!

வாஷிங்டன் : ரெம்டெசிவிர் எனும் மருந்து கொரோனா நோயாளிகளை 31% விரைவாக குணப்படுத்துவது தெரியவந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இவ்வாறான சூழலில் விஞ்ஞானிகளின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது ரெம்டெசிவர் என்ற மருந்து.

அமெரிக்க அரசு மற்றும் கிலீட் சயின்சஸ் என்ற நிறுவனமும் இணைந்து தயாரித்த மருந்து தான் ரெம்டிசிவிர்,. அதனை எபோலா வைரஸ் தொற்றிற்கு பயன்படுத்தினர். மனித உடலுக்குள் நிகழும் வைரஸ் பெருக்கத்தினை கட்டுப்படுத்தும் தன்மை இந்த மருந்திற்கு உள்ளதால், கொரோனா வைரஸுக்கு சிறந்த மருந்தாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் எண்ணினர். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட சில நோயாளிகள் ரெம்டிசிவிர் மருந்தால் விரைந்து குணமடைந்தது வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அதனை அவசரத்துக்கு பயன்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்நிலையில் அமெரிக்காவின் தொற்றுநோய் அமைப்பின் தலைவர் அந்தோனி பவுச்சி ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ரெம்டெசிவியர் எனும் மருந்து கொரோனா நோயாளிகளை 31% விரைவாக குணப்படுத்துகிறது என குறிப்பிட்டுள்ளார்.கொரோனா பாதித்த சுமார் 1000 பேருக்கு ரெம்டெசிவியர் மருந்தைக் கொடுத்ததில், அவர்கள் 11 நாள்களில் குணமடைந்ததாகவும் கூறினார். மேலும் எவ்வித மருந்தையும் உபயோகிக்காதவர்கள் குணமடைய சுமார் 15 நாட்கள் எடுத்துக்கொண்டனர் எனவும் கூறியுள்ளார்.இந்த ரெம்டெசிவிர் மருந்து முழுவதுமாக கொரோனாவிற்கு தடுப்பு மருந்து ஆகாது ஆனால் குணமடையும் வேகத்தை 31 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது என்ற ஒப்பீட்டையும் அளித்துள்ளார். அமெரிக்கா மட்டும் அல்லாது பிரிட்டனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சிலரும் இந்த மருந்தை எடுத்துக் கொள்வது கொரோனாவுக்கு எதிரான ஆற்றலை உடலுக்கு அளிப்பதாக பரிந்துரைத்துள்ளனர்.

Tags : corona patients ,America , Corona, Patients, Remedicavir, USA
× RELATED அமெரிக்காவில் சரக்கு கப்பல்...