×

காஞ்சிபுரம் அருகே பரபரப்பு: கழிவுநீர் லாரி சிறைபிடிப்பு

காஞ்சிபுரம்c: நாடு முழுவதும் 144 தடை அமலில் உள்ளது. இதையொட்டி, கடந்த 40 நாட்களுக்கும் மேலாக, பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இந்நிலையில் திருக்காலிமேடு வழியாக நத்தப்பேட்டை குப்பை கிடங்கு உள்ள பகுதிக்கு, நேற்று கழிவுநீரை ஏற்றி கொண்டு லாரி சென்றது. இதை கண்ட 100க்கும் மேற்பட்ட பெண்கள், அந்த லாரியை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தி, அனைவரையும் கலைய செய்தனர். பின்னர், கழிவுநீர் லாரியை மீட்டு சென்றனர். ஊரடங்கு நேரத்தில், பொதுமக்களின் போராட்டம் பெரும் பரபப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், திருக்காலிமேடு பகுதி வழியாக தினமும் 100க்கும் மேற்பட்ட கழிவுநீர் லாரிகள் செல்கின்றன. இந்த லாரிகளில் இருந்து கழிவுநீர் கொட்டி செல்கிறது. இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் வீட்டில் சாப்பிட முடியவில்லை. கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்ள முகக்கவசம் அணியவேண்டும், கை கழுவ வேண்டும் என அரசு அறிவுறுத்துகிறது. ஆனால் காஞ்சிபுரம் நகராட்சி அதிகாரிகளின், அலட்சியத்தால் சாலையில் கழிவுநீரை ஊற்றி செல்லும் லாரிகளை கண்டு கொள்வதில்லை என்றனர். மதுராந்தகம்: மதுராந்தகம் நகராட்சி காந்தி நகருக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து, தெரு குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதில், 20, 21 ஆகிய வார்டுகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

இங்குள்ள, மாரியம்மன் கோயில் தெரு, மாதா கோயில் தெரு, கல்லாம் பாறை உள்பட காந்தி நகரின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக முறையான குடிநீர் வினியோகம் செய்யவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை காலி குடங்களுடன் மாரியம்மன் கோயில் தெருவில் தண்ணீர் வராத குழாயின் அருகே பெண்கள் திரண்டனர். அங்கு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் அரை மணிநேரம் போராட்டம் நடத்தியும் அதிகாரிகள் யாரும் வராததால், அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.



Tags : Kanchipuram ,Situation , Kanchipuram, sewer truck, captive, curfew
× RELATED நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு...