×

கோயம்பேடு சென்று திரும்பிய வேன் டிரைவருக்கு கொரோனா உறுதி

ஊத்துக்கோட்டை: கோயம்பேட்டில்  காய்கறி கடை உரிமையாளர்கள், டிரைவர்கள், கூலித்தொழிலாளர்கள் என பெரும்பாலானவர்களுக்கு கொரோனா பரவியது.இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஊத்துக்கோட்டையில் இருந்து கோயம்பேட்டிற்கு சென்று காய்கறி வாங்கி வந்த காய்கறி கடைக்காரர்கள் மற்றும் வேன் டிரைவர்கள் என  27 பேருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை டாக்டர் பிரபாகரன் தலைமையில் கொரோனா பரிசோதனை செய்தனர்.

இதில், 26 பேருக்கு கொரோனா இல்லை என்று தெரியவந்தது. மேலும், ஊத்துக்கோட்டை அருகே பேரண்டூர் கிராமத்தை சேர்ந்த காய்கறி கடை வேன் டிரைவருக்கு கொரோனா உறுதியானது. இதைத்தொடர்ந்து, அவர் வசித்த பகுதி, அவர் வேலை செய்த காய்கறி கடைக்கு சீல் வைக்கப்பட்டது.Tags : Corona ,van driver ,Coimbatore ,Koyambedu , Koyambedu, Driver, Corona
× RELATED கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில்...