×

பலியான வீரர்களுக்கு கோஹ்லி அஞ்சலி

மும்பை: காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் உயிரிழந்த 2 ராணுவ அதிகாரிகள் உட்பட 5 பாதுகாப்பு படையினருக்கு இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோஹ்லி அஞ்சலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூக ஊடகம் ஒன்றில் தகவல் பதிந்துள்ள கோஹ்லி, ‘எந்த சூழ்நிலையிலும் தங்கள் கடமைகளை மறக்காத அவர்கள்தான் உண்மையான ஹீரோக்கள். அவர்களின் தியாகங்களை நாம் மறந்து விடக்கூடாது. ஹந்த்வாராவில் உயிர் தியாகம் செய்த ராணுவம் மற்றும் காவல் துறையினருக்கு நான் தலை வணங்குகிறேன். அவர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதுடன் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு எனது அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஜெய்ஹிந்த்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


Tags : Kohli ,victims , Security forces, Kohli, tribute
× RELATED பரமக்குடியில் இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி