×

மின்கம்பத்தில் கார் மோதி நடிகர் உள்பட 3 பேர் பலி

திருவனந்தபுரம்: மலையாளத்தில் கடந்த ஆண்டு வெளியான பூவள்ளியும் குஞ்ஞாடும் என்ற, திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனவர் பேசில் ஜார்ஜ் (30). இவரது சொந்த ஊர் மூவாற்றுப்புழா அருகே வாளகம். இந்நிலையில்  நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணி அளவில் தனது நண்பர்கள் நிதின் (35), அஸ்வின் ஜாய் (29), லெதீஷ் (30), சாகர் (19) ஆகியோருடன் பேசில் ஜார்ஜ் காரில் கோலங்சேரியில் இருந்து கோட்டயம் மூவாற்றுப்புழா நோக்கி சென்று கொண்டிருந்தார்.

வாளகம் பகுதியில் வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் மின்கம்பத்தில் மோதியது. பின்னர் அருகில் உள்ள வீட்டுக்குள்ளும் புகுந்தது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் நடிகர் பேசில் ஜார்ஜ், அவரது நண்பர்கள் நிதின், அஸ்வின் ஜாய் ஆகிய 3 பேரும் இறந்தனர்.

Tags : actor , Electricity, car accident, actor, 3 killed
× RELATED கஞ்சா கடத்திய 3 பேர் கைது