×

தண்டனை பணியிடமாற்றத்தால் பாதிக்கப்பட்ட 118 அரசு டாக்டர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும்: அரசு டாக்டர் சங்கங்கள் முதல்வருக்கு கடிதம்

சென்னை:  அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் பாலகிருஷ்ணன், லட்சுமி நரசிம்மன் உள்ளிட்டோர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:   உலகையே அச்சுறுத்தும் கொரோனா நோய் தொற்றை வேரோடு அழிவுக்கும் பணியில் அரசு மருத்துவர்களுக்கு எப்போதும் பாதுகாவலனாக இந்த அரசு திகழும் என்று தாங்கள் உறுதியளித்தீர்கள்.  அரசு மருத்துவர்களின் நிலுவையிலுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றினாலே போதும் என்று கடந்த மாதம் வேண்டுகோள் வைத்தோம்.  

மேலும் 118 அரசு மருத்துவர்கள் தண்டனை பணிமாற்றத்தால் தொலை தூரங்களில் அவதியுற்று வருகின்றனர்.  அவர்களின் நலன் கருதி தண்டனை பணியிடமாற்றத்தை உடனடியாக ரத்து செய்து அவரவர் சொந்த இடங்களில் மீள்பணியமர்த்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தோம். அப்போது தான் பாதிக்கப்பட்ட அரசு மருத்துவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் பணியாற்றுவார்கள்.


Tags : government doctors ,workplace re-hiring ,government doctor associations , 118 Government Doctors, Corona, Curfew, Government Doctors Associations, Chief Minister, Letter
× RELATED மதுரையில் நாளை நடைபெறவிருந்த வெளி...