×

விஸ்வரூபம் எடுக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் விவகாரம்: சமாதானம் பேச வந்த போலீசார் மீது வடமாநில தொழிலாளர்கள் கல்வீசினர்

* 7 பேர் கைது
* சென்னை முழுவதும் 3 இடங்களில் பரபரப்பு

சென்னை: வெளிமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்ப கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை சமாதானம் செய்தபோது திடீரென ஒரு கும்பல் போலீசார் மீது சரமாரியாக கற்களை வீசியது. இதனால் போலீசார் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர். சென்னையில் நேற்று மட்டும் மூன்று இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கொரோனா ஊரடங்கால் வெளி மாநில தொழிலாளர்கள் அரசின் முகாம்கள் மற்றும் வாடகை ரூம்களில் தங்கி உள்ளனர். வாடகை, உணவு, வேலை மற்றும் கொரோனா பயம் காரணமாக தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று நாள்தோறும் ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று மதியம் அம்பத்தூர் தொழிற்பேட்டை பஸ் நிலையம் அருகில் மேனாம்பேடு சாலையில் சுமார் 100க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் திரண்டு, தங்களை சொந்த ஊருக்கு அனுப்பக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் போராட்டம் நடத்தியவர்களிடம் சமாதானம் செய்தனர்.
அதை ஏற்க வடமாநில தொழிலாளர்கள் ஏற்கவில்லை. இதையடுத்து போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அவர்களில் சிலர் போலீசார் மீது கற்களை வீசினர். இதனால் போலீசார் அந்த கும்பலை  விரட்டியடித்தனர்.

இதுதொடர்பாக அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கற்களை வீசியதாக பீகாரை சேர்ந்த ராஜு குமார் (29), குன்றில்குமார் (20), சுபம் பஸ்வான் (26), குட்டு பஸ்வான் (25), சங்கர் பஸ்வான் (36), சந்தோஷ் (34), இந்திரஜித்குமார் (20) ஆகிய 7 பேரை கைது செய்தனர்.  வடசென்னை : கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தங்கியுள்ள 300க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்ப வலியுறுத்தி நேற்று ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்.கே நகர் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.

தாம்பரம்: தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரில் தனியார் நிறுவனம் சார்பில் பல அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணியில் ஈடுபட்டு வடமாநில தொழிலாளர்கள் நேற்று முன்தினம் இரவு, அவர்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து 1200க்கும் மேற்பட்டோர் மொத்தமாக கிளம்பி வெளியில் வந்தனர். சேலையூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அனைத்து தொழிலாளர்களுக்கும் தலா 3 ஆயிரம் வழங்க தனியார் நிறுவனம் ஒப்புக்கொண்டது.

Tags : Whistleblower Workers ,Northern Territory , Corona, curfew, offshore workers, police, north-state workers
× RELATED திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேலை ஆதரித்து டி.ஆர்.பாலு எம்.பி பிரசாரம்